யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

ஆமாம் பாஸ் இதுதாங்க நம்மளுக்கு இன்னைக்கு இருக்குற ஒரு இனம் புரியாத கேள்வி. யாருக்குங்க ஓட்டு போடுறது எல்லாருமே திருட்டு பயலுகளா மொல்ல மாரிகளை இருகாங்க. இப்போ இருக்குற சூழ்நிலையில யாருமே சரியில்லே. சரி, புதுசா யாராவது வந்தாலும் ஒன்னு அவனுங்க மாறிடுராங்க அப்படி இல்லே அவனுகள ஏற்கனவே இருக்குற திருட்டு பயலுக மிரட்டி தொரத்திடுவானுக இல்லே மாத்திடுவானுங்க.

இந்த மாதிரி இருக்கும் நமக்கு நம்ம வோட்டிங் சிஸ்டம் மேல இருக்குற நம்பிக்கை சுத்தமா போய்டும். ஆனா இத இன்னும் கொஞ்சம் ஆழமா யோசிச்சு பாத்தோம்ன்னா விடை தெரியும்.

மாற்றம் வரும் என
பார்க்கும் நபர் வலி
விரைவாய் சேர்ந்து தீர்த்திடவே
இனி ஒரு விதி செய்வோம் – பாரதியார்.

1. முதலில் ஒரு அரசியல் கட்சி என்பது ஒரு private party என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள நபர்களும் அப்படியே (அடி மட்ட தொண்டரை தவிர).

2. ஒரு அரசியல் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டாலும் இப்போதைய சூழ்நிலையில் (வாரிசு அரசியல் அல்லது ஒரு நடிகரை முன் நிறுத்தி) நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2. ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு அரசியல் கட்சி தலைவரையோ நாம் பார்த்து ஓட்டு போட கூடாது. இது மக்களாட்சி முறைக்கு மிகவும் எதிரானது.

3. மாறாக அவர் அவர் தொகுதியில் எத்தனை காட்சிகள் எந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பதை பார்த்து அந்த நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு நாம் ஓட்டு போட வேண்டும். இது ஒவ்வொரு தொகுதிக்கும் கண்டிப்பாக வேறுபாடும்.

4. அவரை தேர்ந்தெடுக்கும், தேர்ந்தெடுக்கும் போது நம்மக்கு கொஞ்சம் புரிதல் வேண்டும். அவர் எப்படி பட்டவர், எத்தனை சமூக சேவைகளில் ஈடுபட்டவர். அவர் நம் ஊரில் எத்தனை மதிப்பு மிக்கவர். என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுருக்கமா சொல்ல போன நம்ம ஊரை சுத்தி என்ன நடக்குது ன்னு நம்மக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

அவ்வளவு தாங்க! நம்ம அப்பா அம்மா ஓட்டு போட்ட மாதிரி. அதாவது M.G.R, கலைஞர் மற்றும் ஜெயலலிதா வ பாத்து மட்டும் ஓட்டு போட்டது அவங்க தலைமுறையோட போகட்டும்.

ஓட்டு என்பது ஒரு வலிமையான ஆயுதம் அதை மிக சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். – சகாயத்தின் வேண்டுகோள்.

Sagayam IAS

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *